இறால் பண்ணை அமைக்க எதிர்ப்பு ஆர்டிஓ அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

பொன்னேரி: கும்மிடிப்பூண்டி அடுத்த பூவாலை ஊராட்சியில் அடங்கிய தண்டலம் கிராமப்பகுதியில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் இறால் பண்ணை மற்றும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை துவங்க பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதனால் தங்கள் கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு, மண்ணரிப்பு, விவசாய நிலங்கள் பாதிப்பு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர். மேலும், ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்தால் குடிநீர் மாசுபாடு மற்றும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, இறால் பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மூலம் கிராம மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், மாசு ஏற்பட்டு மாம்பழ விளைச்சல் பாதிக்கும் சூழலும் உள்ளதாக தெரிவித்தனர். இதனால் தங்கள் கிராம பகுதியில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க கூடாது என நேற்று பொன்னேரி ஆர்டிஓ அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

Related Stories:

More
>