நேரடி வகுப்புகளுக்கு எதிராக வழக்கு மாணவர்கள் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு வருகின்றனர்: தமிழக அரசு தகவல்

மதுரை:நெல்லையைச் சேர்ந்த அப்துல் வகாபுதீன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் கடந்த செப். 1 முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகள் வரையில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதித்து வருகிறது. மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் மூலம் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், நேரடி வகுப்புகளை உடனடியாக மூடவும், நேரடி வகுப்புகள் நடத்த தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ‘‘9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு சுமூகமான முறையில் வகுப்புகள் நடந்து வருகின்றன. குறிப்பிடும்படி எந்த பிரச்னையும் இல்லை. மாணவர்கள் மகிழ்ச்சியாகவே பள்ளிக்கு வருகின்றனர். வழிகாட்டு ெநறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறது’’’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் விரும்பினால் அவரது கோரிக்கை குறித்து அரசிடம் புதிதாக மனு அளிக்கலாம் எனக் கூறினர்.

Related Stories:

More
>