பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்வு

சேலம்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைத்து வருகின்றன. நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் ஏற்றம் கண்டு வருகிறது. அதுவும் நடப்பு மாதத்தில் தினசரி என்ற அளவில் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் ரூ.106க்கு அதிகமாகவும், டீசல் ரூ.100க்கு அதிகமாகவும் விற்பனையாகிறது.

நாடு முழுவதும் நேற்றும் பெட்ரோல் 31 காசும், டீசல் 33 காசும் உயர்த்தப்பட்டது. நடப்பு மாதத்தில் கடந்த 1ம் தேதியில் இருந்து நேற்று வரை (4, 18, 19ம் தேதி தவிர) 19 நாட்கள் விலையேற்றப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 30 காசு உயர்ந்து ரூ.103.92க்கு பெட்ரோல் விற்கப்பட்டு வருகிறது. டீசல் விலை 33 காசு உயர்ந்து ரூ.99.92க்கு விற்பனையாகிறது.

Related Stories:

More
>