ஊழல் புகார் எதிரொலி? கோவை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி அதிரடி மாற்றம்

கோவை: கோவை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரியாக கடந்த ஒரு வருடத்திற்கு மேல் பணியாற்றி வந்தவர் ஜெகதீசன். இவரிடம், தீபாவளி தற்காலிக பட்டாசு கடை அமைக்க தடையின்மை சான்று கோரும் விண்ணப்பங்கள் ஏராளமாக வந்துள்ளன. இதற்கு சம்மந்தப்பட்ட நபர்களிடம் இருந்து அவர் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தற்போது ஜெகதீசன் நீலகிரி மாவட்டத்திற்கு நிர்வாக பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான, உத்தரவை தீயணைப்புத்துறை டிஜிபி ெவளியிட்டுள்ளார்.

Related Stories:

More
>