ஆபாச படம் பார்க்க மறுத்த 6 வயது சிறுமி படுகொலை: 3 சிறுவர்கள் கொடூரம்

நாகோன்: அசாம் மாநிலத்தில் மொபைலில் ஆபாச படம் பார்க்க மறுத்த 6 வயது சிறுமியை 3 சிறுவர்கள் அடித்து கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தின் நிஜோரியை சேர்ந்த 6 வயது சிறுமியை ஏற்கனவே அவளுடன் நன்கு பழகிய 8 வயது மற்றும் இரண்டு 11 வயது சிறுவர்கள் தங்களிடம் இருந்த மொபைல் போனில் ஆபாச படம் பார்க்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு அவள் மறுப்பு தெரிவிக்கவே, ஏமாற்றத்தினால் ஆத்திரமடைந்த அச்சிறுவர்கள் வீட்டின் அருகே உள்ள கல் உடைக்கும் ஆலையின் கழிவறையில் சிறுமியை நேற்று முன்தினம் அடித்து கொன்று விட்டனர்.

ஆனால், ஒன்றுமே நடக்காதது போல, சிறுமியின் வீட்டில் அவள் ஆலையில் உள்ள கழிவறையில் மயங்கி கிடப்பதாக கூறி கொலை குற்றத்தில் இருந்து தப்ப முயன்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த 3 சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு ஒத்துழைக்காத ஒரு சிறுவனின் தந்தையும் கைது செய்யப்பட்டார். சிறுவர்களின் இந்த செயல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

More
>