தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க காஷ்மீரில் வீரர்கள் குவிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 வாரங்களாக பொதுமக்களை தீவிரவாதிகள் கொன்று வருகின்றனர். தீவிரவாதிகளின் இந்த தாக்குதலை தடுக்கும் வகையில் , கூடுதலாக 50 கம்பெனி  வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். பதுங்கு குழிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள் எளிதில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தப்பி சென்று விடுகின்றனர். அதை தடுக்கவே  பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு சூழல் மேம்பட்டதை அடுத்து கடந்த 2011 மற்றும் 2014ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இவை முழுவதுமாக அகற்றப்பட்டன. தற்போது, 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதற்காக அப்பகுதி மக்களை கொண்ட கிராம பாதுகாப்பு படைகளையும் ராணுவம் உருவாக்கி வருகிறது. இதில், ஆண்கள், பெண்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Related Stories: