தங்கம் கடத்தல் வழக்கில் 29 குற்றவாளிகள் சேர்ப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலம் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடரபாக அமீரக தூதரக துணை செயலாளராக பணி புரிந்த சொப்னா, மக்கள் தொடர்பு அதிகரியாக பணியாற்றிய சரித் உட்பட 25க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் கடத்தலில் முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை செயலாளராக பணயாற்றிய ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதயடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுங்க இலாகா சார்பில் கொச்சியில் உள்ள பொருளாதார குற்ற வழக்குளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நேற்று 29 பேர் மீது குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 3000 பக்கங்களை கொண்ட குற்றபத்திரிகையில் முதல் குற்றவாளியாக சரித்குமாரும், இரண்டாவது குற்றவாளியாக ெசாப்னாவும், 29வது குற்றவாளியாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>