இந்துக்கள் மீது தாக்குதல் வங்கதேசத்தில் குற்றவாளி கைது

தாகா: வங்கதேசத்தில் கடந்த 13ம் தேதி துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. அப்போது இந்து கடவுளான துர்கை காலடியில், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் நகல் வைக்கப்பட்டு இருந்ததாக தகவல் பரவியது. இதனால் அங்கு வன்முறை வெடித்தது. இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 70க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள், இந்துக்கள் வசிக்கும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 6 இந்துக்கள் கொல்லப்பட்டனர்.

இதன் காரணமாக பதற்றமான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில், வங்கதேசம் முழுவதும் வன்முறை வெடிப்பதற்கு காரணமான இக்பால் உசைன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். காக்ஸ் பசார் கடற்கடை பகுதியில் இருந்து இக்பால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். குமில்லாவில் துர்கை சிலையின் காலடியில் இக்பால் உசைன் தான் குரான் நகலை வைத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories:

More
>