பிரதிக்யா யாத்திரையை நாளை தொடங்குகிறார் பிரியங்கா: உபி.யில் பாஜவை வீழ்த்த காங். புது வியூகம்

லக்னோ: உபி, உத்தரகாண்ட், குஜராத் உள்பட 7 மாநிலங்களுக்கு அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. உபி.யில் முதல்வர் யோகி தலைமையிலான ஆளும் பாஜ ஆட்சியை வீழ்த்த காங்கிரஸ் கட்சி புது வியூகங்களை வகுத்து வருகிறது.  அதேபோல், காங்கிரசும் வெற்றி பெற வியூகங்கள் வகுத்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, உபி தேர்தலில் பெண்களுக்கு 40 சதவீதம் வாய்ப்பு அளிக்கப்படும் என்று பிரியங்கா அறிவித்தார்.  

இதற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இந்நிலையில், அவர் கடந்த மாதம் அறிவித்திருந்த 12,000 கி.மீ. சுற்றுப் பயணத் திட்டமான பிரதிக்யா யாத்திரையை நாளைத் தொடங்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. நாளைத் தொடங்கி அடுத்த மாதம் 1ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>