நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நவ.29ம் தேதி தொடக்கம்?

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 4வது வாரத்தில் தொடங்கி ஒரு மாதம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் பொதுவாக நவம்பர் மாதம் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, குளிர்கால கூட்டத் தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. பட்ஜெட் மற்றும் மழைக்கால கூட்டத் தொடரும் பாதியிலேயே முடிக்கப்பட்டன. இந்நிலையில், இந்தாண்டுக்கான குளிர்கால கூட்டத் தொடர் அடுத்த மாத இறுதியில் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நவம்பர் 29ம் தேதி கூட்டத் தொடர் தொடங்கி டிசம்பர் 23 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை, கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட உள்ளது. வழக்கம் போல் கூட்டத்தொடருக்கு முன்பாக எம்பிக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். அனைவரும் மாஸ்க் அணிந்து வர வேண்டும். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக அடுத்த ஆண்டில் உபி உள்ளிட்ட 5 முக்கிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாக நடக்கும் கூட்டத்தொடர் என்பதால் குளிர்கால கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related Stories: