துளித்துளியாய்....

* இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, கொரோனா தொற்று காரணமாக 5வது டெஸ்டில் விளையாட முன்வரவில்லை. அது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், ‘அந்த கடைசி டெஸ்ட் 2022 ஜூலை 1ம் தேதி தொடங்கும்’ என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

*  ‘உலக கோப்பை தொடர் முடிந்ததும் டி20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகப்போவதாக கோஹ்லி அறிவித்தது தனக்கு ஆச்சர்யம் அளித்ததாக’ பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

*  ‘நாம் எல்லோரும் கோஹ்லி தொடர்ந்து அதிக ரன் குவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் அவர் மனிதர்தான்... இயந்திரமல்ல’ என்று தென் ஆப்ரிக்க முன்னாள் நட்சத்திரம் ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார்.

* ஐபிஎல் தொடரில் புதிதாக இணைய உள்ள 2 அணிகள் குஜராத், உத்தரபிரதேச மாநில நகரங்களின் பெயரில் செயல்படும் என்ற தகவல் கசிந்துள்ளது.

Related Stories:

More
>