சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் சாலை விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. கூட்டத்தில் முதன்மை செயலாளர் தீரஜ் குமார், முதன்மை  இயக்குநர் ஆர்.குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகள் மத்தியில் பேசியதாவது:தேசிய நெடுஞ்சாலைகளில் தமிழ்நாட்டில்தான் விபத்து நேரும் இடங்கள் கரும்புள்ளிகள் (பிளாக் ஸ்பாட்) அதிகமாக உள்ளது.  தமிழ்நாட்டில் 748 கரும்புள்ளிகள் போக்குவரத்து ஆராய்ச்சிப் பிரிவு மூலம் அடையாளம் காணப்படுகின்றன.  500 மீட்டர் நீள இடைவெளியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 5 பெரிய சாலை விபத்துகள் அல்லது 10 உயிரிழப்புகள் நிகழ்ந்த இடத்தையே கரும்புள்ளி இடமாக போக்குவரத்து ஆராய்ச்சி பிரிவு அடையாளம் காண்கிறது.

கரும்புள்ளிகள் என அடையாளம்  காணப்பட்டு விபத்துகளை தடுக்க நடவடிக்கை மேற்கொண்ட பிறகு, மீண்டும் விபத்துகள் நடைபெறாமல் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.வெளிநாடுகளில் உள்ள சீரான போக்குவரத்து விதிமுறைகளும் அதை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்படும் பாரபட்சமற்ற சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் வெளிநாடுகளில் சாலை விபத்துகள் குறைவாக உள்ளதற்கான காரணம் இதுவே. சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்போதே விபத்துகள் ஏற்படா வண்ணம் வடிவமைக்கப்பட வேண்டும். வாகனங்கள் நெரிசல் காரணமாக காற்றில் அதிகபடியான மாசு ஏற்படுகிறது.  இதனை தடுக்கும் வகையில் சாலைகளின் இரு ஓரங்களிலும் மரங்கள் நட்டு பாதுகாக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஒத்துழைக்க வேண்டும். 

Related Stories: