தொலைதொடர்பு ஊழியர்கள் சங்கத்தின் நிலம், நிதி தொடர்பான பிரச்னையை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகியவற்றை சேர்ந்த ஊழியர்களை உறுப்பினர்களாக கொண்ட  அரசு தொலைதொடர்பு ஊழியர்கள் கூட்டுறவு சங்கம், பன்-மாநில கூட்டுறவு சங்கங்களின் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டது. கடந்த 2004-05ல் அந்த சங்கம் திருவள்ளூர் மாவட்டம் வெள்ளானூரில் உள்ள 95.55 ஏக்கர் நிலத்தின்மீது 15 கோடியே 97 லட்சம் ரூபாய்க்கு ஐசிஐசிஐ வங்கியின் கடனுதவியுடன் வாங்கி, அதில் 88.55 ஏக்கர் நிலத்தில் வீடுகளை கட்ட திட்டமிட்டது. இந்நிலையில் அதில் ஒரு பகுதி பெங்களூருவை சேர்ந்த ஆட்கோ  என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.  அதே நாளில் ஜீசஸ் மிஷனரீஸ் என்ற அமைப்பிற்கு அந்த நிலம் மாற்றப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டுமென்று சங்கத்தின் உறுப்பினரான என்.பாபு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 இந்த வழக்கு மீண்டும் நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சங்கத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.  வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் தலைமையிலான குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு  சங்கத்திற்கு வாங்கப்பட்ட 95.55 ஏக்கர் நிலம், அதில் ஒரு பகுதி விற்பனை செய்யப்பட்டது, அதற்காக எடுக்கப்பட்ட முடிவுகள், நிலம் தொடர்பான நிதி பரிமாற்றங்கள், சங்க உறுப்பினர்களுக்கான வீட்டுவசதி திட்டத்தின் செயல்பாடு ஆகியவை குறித்து  விசாரணை நடத்தும். கடந்த 2001ம் ஆண்டு முதல் சங்கத்தின் நிதி உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த குழு விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான இந்த குழுவிற்கு அனைத்து தரப்பும் முழுமையான ஒத்துழைப்பை தரவேண்டும். குழு தனது அறிக்கையை தாக்கல் செய்வதற்காக வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைக்கிறேன் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: