தமிழகத்தில் 1,152 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில், நேற்று புதிதாக 1,152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 19 பேர் உயிரிழந்துள்ளனர்.இது குறித்து  சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று  1,152 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த எண்ணிக்கை 26,92,949 ஆக உள்ளது.  இதேபோல், த 1,392 பேர் குணமடைந்தனர். அதன்படி குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,43,431 ஆக உள்ளது.

கொரோனா சிகிச்சை பலனில் லாமல், 19 பேர்  உயிரிழந்துள்ளனர். அதில்  அதிகபட்சமாக கோவையில் 5 பேர், திருவள்ளூர் 3 பேரும் 19 பேர்  உயிரிழந்துள்ளனர். அதன்படி இதுவரை 35,987 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக நேற்று  சென்னையில் 147 பேர், கோவையில் 140 பேர் என 2 மாவட்டத்தில் நூற்றுக்கும்  மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>