கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை: அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

சென்னை: கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என்று  அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டியளித்துள்ளார். சென்னையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். நகைக்கடன் தள்ளுபடியால் சுமார் 11 லட்சம் பேர் பயனடைவார்கள். 15 கூட்டுறவு சங்கங்களில் சுமார் 12 கோடி முறைகேடு நடந்துள்ளது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories:

More
>