தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று, சுகாதார தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொது பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாநில தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். வேல்முருகன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, ‘‘சுகாதார தொழிலாளர்களின் ஊதியத்தை குறைக்கும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும். அரசாணை 62ன்படி ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களின் வேலை பளுவை அதிகரிப்பதை கண்டிக்கிறோம். ஒப்பந்த கூலி முறையை ரத்து செய்ய வேண்டும். அனைத்து சுகாதார தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’’ என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

Related Stories:

More
>