2வது நாளாக பலத்த மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை-மக்கள் மகிழ்ச்சி

கரூர் : கரூரில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு  வரை பலத்த மழை பெய்து கரூரை குளிர்வித்தது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான அளவில் சாரல் மழை பெய்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 6 மணி வரை கரூர் நகரப்பகுதிகளை சுற்றிலும் சாரல் மழை பெய்தது. இரவு பலத்த மழை பெய்தது.மழையின் காரணமாக கரூர் நகரம் ஜில்லென்ற கிளைமேட்டுக்கு மாறியதால் அனைத்து தரப்பினர்களும் சந்தோஷமடைந்தனர்.

Related Stories:

More
>