பருவமழையால் கேரட் விளைச்சல் இருந்தும் உரிய விலை கிடைக்கவில்லை-விவசாயிகள் புலம்பல்

கோத்தகிரி : கோத்தகிரியில் பருவமழையால் கேரட் விளைச்சல் அதிகமாக இருந்தும் உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் புலம்பி தவிக்கின்றனர். கோத்தகிரி அதனை சுற்றியுள்ள பகுதிகளான மிளிதேன், கேர்க்கம்பை, ஈளடா, எஸ்.கைக்காட்டி ஆகிய பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட ஏக்கரில் கேரட் பயிரிடப்பட்டு வருகிறது.

பருவமழை பெய்து வருவதால் கேரட் விளைச்சல் அதிகமாக உள்ளது. ஆனால், சமவெளிப் பகுதிகளில் உள்ள சந்தைகளில் மலைப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கேரட்டிற்கு நல்ல விலை கிடைப்பதில்லை. சந்தைகளில் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விலை போன கேரட் தற்போது ரூ.20க்கு விற்பனையாகிறது. பருவமழையால் கேரட் விளைச்சல் அதிகமாக இருந்தும் நல்ல கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Stories:

More
>