சமூக வலைத்தளங்களில் போகிற போக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வேலையில்லாதவர்கள் சுமத்த கூடாது!: அண்ணாமலையை மறைமுகமாக சாடிய செந்தில் பாலாஜி..!!

சென்னை: சமூக வலைத்தளங்களில் போகிற போக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வேலையில்லாதவர்கள் சுமத்த கூடாது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார். தமிழகத்தின் பாஜக தலைவரான அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அதில், கடந்த வாரம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20.00 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும் உற்பத்தி செய்யும் அனல் மின்சாரத்தின் உற்பத்தி செலவை விட 5 மடங்கு இது கூடுதலான விலை என்றும் கூறினார்.

அதற்கான ஆதாரயத்தை வெளியிட தயார் என்று கூறி இருந்தார். அவரது பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அண்ணாமலை ஆதாரம் உள்ளது என்று கூறுகிறார். எப்போது எங்கே அவர் அதை வெளியிட்டாலும் நான் வர தயார். ஆதாரங்களை வெளியிடவில்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.  இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் போகிற போக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வேலையில்லாதவர்கள் சுமத்த கூடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அதுவும் பொதுவெளியில் அண்ணாமலை போன்றோர் குற்றச்சாட்டுகளை ஆதாரமின்றி சுமத்தக்கூடாது. அரசின் மீது அவதூறு பரப்புவதை நாங்கள் சும்மா பார்த்து கொண்டு இருக்க மாட்டோம் என்றும் அமைச்சர் ஆவேசமாக கூறியிருக்கிறார். மேலும் அரசின் மீது ஆதாரத்துடன் குற்றம் சுமத்தினால் நாங்கள் விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம். மின்துறையில் அனைத்து திட்ட பணிகளையும் வெளிப்படை தன்மையுடன் அரசு நிறைவேற்றி வருகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.

Related Stories:

More
>