வண்டுகள் துளைக்காமல் இருக்க பாதுகாக்கப்படும் 90 ஆயிரம் நெல் மூட்டைகள்

கலசபாக்கம் :  கலசபாக்கம் அருகே லாடவரம் செல்லும் சாலையில் உள்ள மைதானத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 90 ஆயிரம் நெல் மூட்டைகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.மேலும், ரேஷன் கடைகளுக்கு அரிசி தயாரித்து அனுப்புவதற்காக  மூட்டைகளும் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நெல் மூட்டைகளில் வண்டுகள் துளைக்காமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழிலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் பாதுகாப்பான முறையில் அரிசி தயாரிப்பதற்காக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Stories:

More
>