வடதண்டலம் கிராம பெரிய ஏரிக்கரையில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி-எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

செய்யாறு :  செய்யாறு அருகே வடதண்டலம் கிராம பெரிய ஏரி கரையில் 10,000 பனை விதைகள்  நடும் பணியை எம்எல்ஏ ஒ.ஜோதி தொடங்கி வைத்தார்.

செய்யாறு ஊராட்சி ஒன்றியம் வடதண்டலம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கரை மீது 10,000 பனை விதைகள் நடுவதற்கு ஊராட்சி மன்ற நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது. அதன்படி 10,000 பனை விதை நடும் பணியை எம்எல்ஏ ஒ.ஜோதி நேற்றுமுன்தினம் காலை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் பாரதி பரசுராமன், ஒன்றியக் குழுத் தலைவர் பொறுப்பு ஆர்.வீ.பாஸ்கரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோபால், ஞானவேல், முன்னாள் சேர்மன்கள் லஷ்மி சங்கர், என்.சம்பத், அரசு வழக்கறிஞர் கே.விஸ்வநாதன், திமுக பிரமுகர்கள் சதாசிவ துரைசாமி, சுந்தரேசன், பார்த்திபன், தாஸ், செல்வகுமார், ராஜ்குமார், ராந்தம் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>