நெல்லை அருகே ஆண் யானை மர்மமான முறையில் உயிரிழப்பு: வனத்துறை அதிகாரிகள் விசாரணை

நெல்லை: பணகுடி பகுதியில் இன்று அதிகாலை 13 வயது ஆண் யானை இறந்து கிடந்தது. தும்பிக்கை மற்றும் பின்புறத் தில் ஏற்பட்ட புண்களால் இந்த யானை இறந்ததாக கூறப்படுகிறது. நெல்லை மாவட்டம் பணகுடியை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டு யானைகள், மிளாக்கள், காட்டுபன்றிகள் என வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. இவைகளில் சில காட்டுயானைகள் மற்றும் காட்டுப்பன்றிகள் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களுக்கு சேதம் விளைவிப்பது அடிக்கடி நடந்து வருகிறது. வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் நுழைவதை தடுக்க வெடிகள் வெடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கன்னிமார்தோப்புக்கும், குத்தரபாஞ் சான் அருவிக்கும் இடையே உள்ள வனப்பகுதியில் இன்று அதிகாலை 13 வயது ஆண் யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் வனத்து றையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர். யானையின் தும்பிக்கை மற்றும் பின்புறத்தில் ஏற்பட்ட புண்களால் நலிவடைந்த தால் இறந்ததாக கூறப்படுகிறது. விளைநிலங்களுக்குள் யானைகள் நுழைவதை தடுக்க யாராவது யானையை விஷம் வைத்து கொன்றார்களா? என்ற கோணத்திலும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

குத்தரபாஞ்சான் அருவிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் மது குடித்து விட்டு பாட்டில்களை உடைத்து வனப்பகுதிக்குள் எறிகின்றனர். இதில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் காயமடைகின்றன. பணகுடி கால்நடை டாக்டர்கள் இறந்த 13 வயது ஆண் யானையை உடற் கூறு ஆய்வு செய்தனர். பின்னர் மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதியில் யானை அடக்கம் செய்யப்பட்டது. யானையின் மரணத்தால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மது பானங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

More
>