குற்றாலத்தில் சாரலுடன் இதமான சூழல்

தென்காசி : குற்றாலத்தில் நேற்று மதியம் வரை வெயிலும், மதியத்திற்கு பிறகு சாரலுடன் இதமான சூழலும் காணப்பட்டது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது.

குற்றாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அதன் பிறகு இரு நாட்களாக மழை சற்று ஓய்ந்ததையடுத்து வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வந்தது. நேற்று மதியம் வரை லேசான வெயில் காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு இதமான சூழல் நிலவியது.

இடையிடையே லேசான சாரலும் பெய்தது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. கொரோனா தொற்று காரணமாக அருவிகளில் விதிக்கப்பட்ட தடை தற்போதும் தொடர்கிறது. தடையை மீறி யாரும் அருவிகளில் குளித்து விடாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

More
>