விளக்கேற்றுவது, கை தட்டுவதால் கொரோனா ஒழியாது; தடுப்பூசியால் தான் கொரோனா ஒழியும் என்பது இப்போதாவது பிரதமருக்கு புரிந்ததில் மகிழ்ச்சி..கி.வீரமணி பேச்சு..!!

அரியலூர்: தடுப்பூசி போட்டால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும் என்பது இப்போதாவது பிரதமருக்கு தெரிந்ததில் மகிழ்ச்சி என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் செந்துறையில், நீட் தேர்வுக்கு எதிரான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, இந்தியாவில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை புரிந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், விளக்கேற்றுவது, கைதட்டுவது போன்றவற்றால் கொரோனாவை ஒழிக்க முடியாது என்பதை பிரதமர் நரேந்திர மோடி தெரிந்துக்கொண்டதாக கூறினார். செய்தியாளர்களிடம் கி.வீரமணி பேசியதாவது; கைதட்டல் மூலமாகவோ, விளக்கேற்றுவதன் மூலமாகவோ இனிமேல் கொரோனாவை ஒழிக்க முடியாது என்பதை பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார்.

தடுப்பூசி போட்டால் தான் கொரோனாவை ஒழித்து கட்ட முடியும் என்று பிரதமருக்கு தற்போது தான் புரிந்துள்ளது. இந்திய அளவில் அதிக அளவில் தடுப்பூசி போட்டுக்கொண்டு மாநிலங்களில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது. இது விஞ்ஞான கண்ணோட்டத்துடன் இருக்கின்ற மாநிலம். 100 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை படைத்திருப்பது பாராட்டுக்குரியது தான். ஆனால் அதனை பிரதமர் மோடி முன்கூட்டியே தொடங்கவில்லை என்றுசாடினார். தொடர்ந்து பேசுகையில், நீட் தேர்வு தொடக்கம் அல்ல, தொல்லை என்று  கி.வீரமணி குறிப்பிட்டார்.

Related Stories:

More
>