தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

சேலம்: எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறுகிறது. சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன் பாளையத்தில் உள்ள இளங்கோவன் வீட்டில் 5 மணி நேர காத்திருப்புக்கு பின் சோதனை நடைபெறுகிறது. சென்னையில் இருந்து இளங்கோவன் வர தாமதமானதால் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 5 மணி நேரம் காத்திருந்தனர். இளங்கோவனுக்கு சொந்தமான 17 இடங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது. இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன் குமார் ரூ.3.78 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 6 ஆண்டுகளில் இளங்கோவனின் சொத்து மதிப்பு 18 மடங்கு உயர்ந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அதிமுக ஆட்சியிலேயே வருமான வரித்துறை சோதனைக்கு ஆளானவர் இளங்கோவன். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் உள்ள இளங்கோவன் அதிமுகவிலும் நிர்வாகியாக உள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பல கோடி ரூபாயை மாற்றியதாகவும் இளங்கோவன் மீது புகார் உள்ளது.

Related Stories: