பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி அமித்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து!!

டெல்லி :  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய உள்துறை அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “திரு.அமித்ஷா ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் பல ஆண்டுகளாக அமித்ஷா உடன் பணியாற்றியுள்ளேன், கட்சியையும் அரசாங்கத்தையும் வலுப்படுத்த அவரது சிறந்த பங்களிப்புகளைக் கண்டுள்ளேன். அவர் அதே ஆர்வத்துடன் தொடர்ந்து தேசத்திற்கு சேவை செய்ய அவருக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள பதிவில், வளமான, வலிமையான பாரதத்தை உருவாக்க உறுதி கொண்டு பிரதமரோடு தோளோடு தோள் நின்று தீராத காஷ்மீர் எல்லை பிரச்சனை முதல் கன்னியாகுமரி வரை அகண்ட பாரதத்தை அரசியல் சாணக்கியத்துடன் முன்னேற்றப்பாதையில் முழு மூச்சுடன் ஈடுபடும் எங்களின் வழிகாட்டி பாரத தாயின் நம்பிக்கை நட்சத்திரம்.மரியாதைக்குரிய மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: