நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் காரணமில்லை : வல்லுநர் குழு உறுதி!!

டெல்லி : நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் காரணமில்லை என மத்திய ஆய்வு குழு தெரிவித்துள்ளது.நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17ம் தேதி திடீர் மாரடைப்பால் இறந்தார். இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பாகதான் அவர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு, மக்களுக்கிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். ஆனால், மறுநாள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், ஏப்ரல் 17ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.  

இந்த நிலையில் நடிகர்  விவேக்கின் மரணம் குறித்து தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி ஆய்வு செய்த மத்திய குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.  அதில்,  நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இரு நாட்களுக்கு பிறகு 2021 ஏப்ரல் 17-ல் விவேக் இறந்தது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் காரணமில்லை.

ஏப்ரல் 15-ல் கொரோனா தடுப்பூசிபோட்டுக்கொண்ட நடிகர் விவேக் மாரடைப்பால் ஏப்ரல் 17-ல் உயிரிழந்தார். உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே விவேக் உயிரிழந்தார் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை மத்திய அரசு மீண்டும் உறுதிசெய்துள்ளது.

Related Stories: