×

காங்கோ நாட்டில் மர்ம நோய் தாக்குதலுக்கு 165 குழந்தைகள் உயிரிழப்பு!!

கின்ஷாசா : கொரோனா இரண்டாவது அலை அடங்கிவரும் மகிழ்ச்சியிலும், மூன்றாவது அலை குறித்த அச்சத்திலும் உலக மக்கள் உள்ளனர். இந்த நிலையில் காங்கோ நாட்டில் உள்ள குவிலு மாகாணத்தில் மர்ம நோய் தாக்கியதில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை 165 குழந்தைகள் உயிரிழந்துவிட்டன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் தென்மேற்கில் குவிலு மாகாணத்தில் குங்கு என்ற நகரில் கடந்த ஆகஸ்டில் முதன்முறையாக மர்ம நோய் ஏற்பட்டு உள்ளது.  இதன்பின்னர் அடுத்தடுத்து பரவியதில் 165 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.

மர்மநோய் தாக்கப்பட்ட குழந்தைகள் மலேரியாவுக்கான அறிகுறி மற்றும் ரத்த சோகை ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளுடன் காணப்படுவதாக காங்கோ நாட்டின் பிராந்திய சுகாதாரத்துறை தலைவர் ஜீன்-பியர் பாசாக்தெரிவித்துள்ளார்.  மேலும் பெரும்பாலும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளே அதிக அளவு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் lozo ,Munene,Kinzamba ஆகிய கிராமங்களில்  நாள்தோறும் 4 குழந்தைகள் உயிரிழப்பதாகவும் Alain Nzamba என்ற சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.Tags : Congo , காங்கோ, மர்ம நோய், தாக்குதல் , குழந்தைகள்
× RELATED காங்கோவில் எரிமலை சீற்றத்தால்...