கொரோனாவுக்கு எதிரான போர் நடந்து கொண்டிருப்பதால் ஆயுதங்களை கீழே போட்டு விடக்கூடாது; மாஸ்க் போடுவதை தொடர வேண்டும்: பிரதமர் மோடி அறிவுரை

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான போர் நடந்து கொண்டிருப்பதால் ஆயுதங்களை கீழே போட்டு விடக்கூடாது என பிரதமர் மோடி நாட்டு  மக்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்தியாவில் கொரோனா 3வது அலை தொடர்பான அச்சம் காரணமாக பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஒன்றிய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வந்தன. அதன் பயனாக நாட்டு மக்களுக்கு, 100 கோடி தடுப்பூசி ‘டோஸ்’களை செலுத்தி, இந்தியா இன்று சாதனை படைத்துள்ளது.

அடுத்த சில நாட்களில் தீபாவளி, மிலாடி நபி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால், கொரோனா பரவலை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு சில அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்தது. இதனிடையே இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது; பண்டிகை காலங்களில் அஜாக்கரதையாக இருக்க கூடாது; மாஸ்க் போடுவதை தொடர வேண்டும். போரின் போது கவசங்களை தொடர்ந்து அணிவது போல கொரோனா தடுப்பு விதிகளை தொடர வேண்டும்.

கொரோனாவுக்கு எதிரான போர் நடந்து கொண்டிருப்பதால் ஆயுதங்களை கீழே போட்டு விடக்கூடாது. கடந்தாண்டு கொரோனா காணமாக தீபாவளி உற்சாகமாக இல்லை. இந்தாண்டு தீபாவளி 100 கோடி தடுப்பூசிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களின் உழைப்பில் உருவான பொருட்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories: