சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு.. பள்ளிகளை மூட உத்தரவு; 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!!

பெய்ஜிங் : சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து அனைத்துப் பள்ளிகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.தொடர்ந்து 5வது நாளாக தொற்று அதிகரித்ததை அடுத்து நூற்றுக்கணக்கான விமானங்களை சீனா ரத்து செய்துள்ளது.தொற்று பரவக்கூடிய இடங்களை கண்டறிந்து வட்டார அளவில் முழு முடக்கத்தை கடைபிடிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.கொரோனா பரிசோதனைகளையும் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது சீன சுகாதாரத்துறை.

வெளிநாடு ஒன்றில் இருந்து சீனாவுக்கு சுற்றுலா வந்த மூத்த தம்பதியிடம் இருந்து தான் கொரோனா பரவியதாக சீன அரசு சந்தேகித்துள்ளது.சந்தேகத்தின் அடிப்படையில் மூத்த தம்பதியுடன் வந்த சுற்றுலாப் பயணிகள், அவர்கள் சென்ற மாகாணங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.ஷாங்காய், லியான், இன்சு உள்ளிட்ட 5 மாகாணங்களில் கண்காணிப்பை சீனா தீவிரப்படுத்தி உள்ளது.வடமேற்கு சீனாவில் உள்ள வான்சூ நகரில் இருந்து கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இன்றி வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மாங்கோலியாவிலும் எந்த நகரத்தில் இருந்தும் மக்கள் வெளியேறத் தடை விதித்துள்ளது சீன அரசு. 

Related Stories: