இங்கிலாந்து ராணி எலிசபெத் மருத்துவப் பரிசோதனைகளுக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்!: பக்கிங்ஹாம் அரண்மனை விளக்கம்..!!

இங்கிலாந்து: இங்கிலாந்து ராணி எலிசபெத் மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

95 வயதாகும் ராணி எலிசபெத், பொதுப்பணிகளில் இருந்து சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறியதாகவும் வழக்கமான சோதனைகளுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் நேற்று மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வின்ஸ்டன் கோட்டைக்கு திரும்பிவிட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணி எலிசபெத் தற்போது நல்ல மனநிலையில் உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்திரிகை நிறுவனம் அளித்த இந்த ஆண்டின் சிறந்த முதியவருக்கான விருதை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஏற்க மறுத்துவிட்டார். மறைந்த இங்கிலாந்து இளவரசரும், ராணி எலிசபெத்தின் கணவருமான பிலிப் கடந்த 2011ம் ஆண்டு தனது 90 வயதில் ஆண்டின் சிறந்த முதியவர் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>