புதிய வேலைவாய்ப்புகள் முன்னணியில் தமிழகம்!: ஜூலை மாதத்தை காட்டிலும் ஆக. மாதத்தில் 6.1% உயர்வு..!!

சென்னை: தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் 1 லட்சத்து 74 ஆயிரம் பேர் அமைப்பு சார்ந்த வேலைகளில் இணைந்திருப்பது தெரியவந்துள்ளது. வருங்கால வைப்பு நிதியத்தில் புதிதாக இணைவோரின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாதந்தோறும் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன்படி தமிழ்நாட்டில் ஜூலை மாதத்தை காட்டிலும் ஆகஸ்ட் மாதத்தில் 6.1 அளவு விழுக்காடு அமைப்பு சார்ந்த வேலைகளில் புதிதாக சேர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஜூலை மாதத்தில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 29 பேர் அமைப்பு சார்ந்த வேலைகளில் இணைந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 73-ஆக அதிகரித்துள்ளது. வருங்கால வைப்பு நிதியத்தில் புதிதாக இணைவோரின் எண்ணிக்கையில் தமிழ்நாடு தொடர்ந்து 3வது இடத்திலேயே நீடிக்கிறது. கொரோனா 2ம் அலை ஊரடங்கிற்கு பிறகு உற்பத்தி, பொறியியல், கட்டுமான துறைகளில் புதிதாக இணைவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது இந்த புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

Related Stories: