புனேயில் துப்பாக்கி முனையில் வங்கியில் ரூ.2 கோடி நகை ரூ.31 லட்சம் கொள்ளை: 5 பேர் கும்பலுக்கு வலை

புனே: மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டம் பிம்ப்ரிகேட் கிராமத்தில் உள்ள பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் நேற்று மதியம் கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தன. அதில், நேற்று மதியம், வங்கியின் முன்பு வந்து நின்ற காரில் இருந்து முகமூடி அணிந்த 5 பேர் இறங்குகின்றனர். அவர்களில் ஒருவர் வங்கிக்கு வெளியே நிற்கிறார். மற்ற 4 பேரும் வங்கிக்கு உள்ளே சென்றதும் துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டுகின்றனர். ஊழியர்கள் கையை உயர்த்தியதும், வங்கி மேலாளர், கேஷியரை மிரட்டி பணம், நகைகளை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பிச் செல்கின்றனர். கார் அகமத்நகர் நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.

கொள்ளை சம்பவம் குறித்து வங்கி ஊழியர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். வங்கி ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில், சுமார் ரூ.2 கோடி நகைகள் மற்றும் ரூ.31 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது தெரிய வந்தது. கொள்ளையர்கள் சென்ற திசையில், சோதனைச்சாவடிகள் மூலம் வாகனசோதனை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட 5 பேர் கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Related Stories: