×

தமிழகத்தில் 1,164 பேருக்கு கொரோனா: 20 பேர் உயிரிழப்பு

சென்னை:  மக்கள் நல்வாழ்வுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று  1,29,820 பேருக்கு கொரோனா பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டது.   இதில் 1,164 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து   தமிழகத்தில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,91,797 ஆக   உள்ளது.  1,412 பேர் குணமடைந்து  வீடு    திரும்பினர். அதன்படி குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,42,039 ஆக   உள்ளது.  20 பேர்  உயிரிழந்துள்ளனர்.

இதில், அதிகபட்சமாக கடலூரில் 3 பேர், கோவை, திண்டுக்கல், ஈரோடு, தஞ்சாவூர், திருச்சியில் தலா 2 பேரும், அரியலூர், சென்னை, காஞ்சிபுரம், நாமக்கல், ராமநாதபுரம், திருவள்ளூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா 1 நபரும் என 20 பேர்  உயிரிழந்துள்ளனர். அதன்படி இதுவரை 35,968 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக நேற்று  சென்னையில் 152 பேர்,  கோவையில் 137 பேர்,   என 2 மாவட்டத்தில் நூற்றுக்கும்  மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   மற்ற மாவட்டங்களில் பாதிப்பு  எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்துள்ளது.Tags : Corona ,Tamil Nadu , Corona for 1,164 people in Tamil Nadu: 20 killed
× RELATED கொரோனா ஊரடங்கு காரணமா?: நாட்டில்...