பரிசோதனை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் எடப்பாடி

சென்னை: எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பரிசோதனையை முடிந்து, நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி (67), கடந்த ஏப்ரல் மாதம் குடலிறக்கம் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் திடீரென லேசான வயிற்று வலி ஏற்பட்டதால் சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எண்டோஸ்கோபி பரிசோதனையை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.

தொடர்ந்து, எட்டு மணி நேர பரிசோதனைக்கு பின் சில மருத்துவ அறிவுரைகளை மருத்துவர்கள் வழங்கினர். அதன்பின்னர் சிகிச்சை முடிந்து மாலையில் எடப்பாடி பழனிசாமி வீடு திரும்பினார். மேலும் பரிசோதனைக்காக மட்டுமே வந்துள்ளதால் அதிமுக தொண்டர்கள்  மருத்துவமனைக்கு நலம் விசாரிக்க வர வேண்டாம் என்று அறிவுறுத்தியதால் அதிமுகவினர் யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

Related Stories: