×

இலங்கை கடற்படை அட்டூழியம் கண்டித்து 6 மாவட்ட மீனவர்கள் உண்ணாவிரதம்

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகியோர் சென்ற விசைப்படகை இலங்கை கடற்படையினர், ரோந்து கப்பலால் மோதி கடலில் மூழ்கடித்தனர். இதில் மீனவர் ராஜ்கிரண் கடலில் மூழ்கி உயிரிழந்தார். சுகந்தன், சேவியர் ஆகியோரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தை கண்டித்தும், மீனவர் ராஜ்கிரன் உடலை கோட்டைப்பட்டினம் கொண்டுவரவும், 2 மீனவர்களை மீட்கவும் வலியுறுத்தி கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 1500 பேர், நேற்று 2வது நாளாக வேலைநிறுத்தம் செய்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மீனவர்களின் குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம், காரைக்கால் மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றனர். 2 மீனவர்களை மீட்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Sri Lanka condemns naval atrocities 6 District Fishermen Fasting
× RELATED மதத்தை களங்கப்படுத்தியதாக ஆவேசம்...