×

கேரள வனப்பகுதிக்கு துப்பாக்கியுடன் சென்ற தமிழக ஏட்டு சஸ்பெண்ட்

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கேரள மாநிலம் முத்தங்கா வனச்சரகம் தோட்டமூலா  வனப்பகுதியில் கடந்த 19ம் தேதி துப்பாக்கியுடன் சிலர் சென்றனர். இது வனப்பகுதியில் வைத்திருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக ரேஞ்சர் சுனில்குமார் ஆய்வு செய்தார். அப்போது பந்தலூர் அருகே எருமாடு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் சிஜீ (42) என்பவர் தனது நண்பர்களுடன் வனப்பகுதிக்கு சென்றது  தெரியவந்தது. தமிழக காவல்துறை எதற்காக கேரளா வனப்பகுதிக்குள் துப்பாக்கியுடன் சென்றது?.

வனவிலங்குகளை வேட்டையாடவா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து கேரளா வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவியில் பதிவான காட்சிகள் மற்றும் ஆதாரங்களுடன் நீலகிரி மாவட்ட எஸ்பிக்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில், விசாரணை நடத்தி தலைமை காவலர் சிஜீவை சஸ்பெண்ட் செய்து எஸ்பி ஆஷிஸ் ராவத் உத்தரவிட்டுள்ளார்.Tags : Tamil Nadu ,Kerala forest , To the forest of Kerala Gone with the gun Tamil Nadu Eight Suspended
× RELATED தமிழக மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து...