சென்னை தனியார் வங்கி பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன்மணி (47). கணவர் இறந்துவிட்டார்.இவரது மகள்கள் மஞ்சு பார்கவி (26), வித்யபாரதி (24). மஞ்சு பார்கவிக்கு திருமணமாகிவிட்டது. வித்யபாரதி சென்னை  அம்பத்தூரில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தாய் பொன்மணிக்கு உடல்நிலை சரியில்லாததால் வங்கிப்பணியை  விட்டுவிட்டு வித்யபாரதி தாயாருடன் இருந்து வந்தார்.  

இந்நிலையில், நேற்று முன்தினம் உடல்நலமில்லாமல் வந்த மூத்த மகள் மஞ்சு பார்கவியை சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் உள்ள மருத்துவமனைக்கு பொன்மணி அழைத்து சென்றார். பின்னர் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வித்யபாரதி தனது அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.  இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து தனியார் வங்கி பெண் அதிகாரி தற்கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More
>