சேலத்தில் மசாஜ் சென்டர் அழகி கொலை சென்னை காதலன் கைது

சேலம்: சேலம் சங்கர் நகரில் மசாஜ் சென்டர் நடத்தி வந்தவர் பெங்களூரைச் சேர்ந்த தேஜ்மேண்டல் (27). இவர் கொலை செய்யப்பட்டு, உடல் சூட்கேஸில் அடைத்து வீட்டில் உள்ள பரண் மீது வீசப்பட்டு கிடந்தது. இதுதொடர்பாக அவரிடம் வேலை பார்த்து தலைமறைவான லப்லு மற்றும் 3 இளம்பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். இதில், லப்லு, நிஷி ஆகியோர் காதலர்கள் என கூறப்படுகிறது. இவர்கள் வங்கதேசம் தப்பி விட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக வினய் என்ற வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் பள்ளப்பட்டி பகுதியில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்தியது தொடர்பாக தேடப்பட்ட ஆத்துரை சேர்ந்த பிரதாப் சென்னையில் தலைமறைவாக இருந்தபோது பிடிபட்டார். அவரது காதலிதான் தேஜ்மேண்டல் என தெரியவே அவரை பிடித்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ‘‘தேஜ்மேண்டல், லப்லுவுக்கு ₹2 லட்சம் கடன் கொடுத்திருந்தார். அதனை திருப்பிக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் அவர்தான் கொன்றிருக்கலாம்,’’ என பிரதாப் போலீசாரிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தப்பிச் சென்ற 4 பேரில் 2 பெண்கள் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப் படையினர் விரைந்துள்ளனர். இந்நிலையில், பிரதாப்பை ஏற்கனவே போடப்பட்ட வழக்கில் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories:

More
>