×

நாடாளுமன்ற கூட்டத்தில் 100% பங்கேற்ற எம்பி.க்களுக்கு வெங்கையா நாயுடு பாராட்டு

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டங்களில் எம்பி.க்களின் செயல்பாடுகள் குறித்த விவரங்கள்  தற்போது வெளியாகியுள்ளது. அதில், திமுக மாநிலங்களவை எம்பி.யான வில்சன் உட்பட பலர் நாடாளுமன்ற குழுவால் நடத்தப்பட்ட அனைத்து கூட்டங்களிலும் முழுமையாக நூறு சதவீதம் கலந்து கொண்டு வருகைப் பதிவை செய்துள்ளனர். இதே போன்று, மேலும் 16 எம்பி.க்களும் வருகைப் பதிவு செய்துள்ளனர். அதில், பாஜவை சேர்ந்தவர்கள் 10 பேரும், காங்கிரசை சார்ந்தவர்கள் 3 பேரும், சமாஜ்வாடி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளில் இருந்து தலா ஒரு உறுப்பினர்களும் 100 சதவீத வருகையை பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags : Venkaiah Naidu , Venkaiah Naidu congratulates MPs who participated 100% in the parliamentary session
× RELATED 100 வீடுகளில் வெள்ளநீர்