குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருப்போரூர்:  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தேரடி தெருவை சேர்ந்தவர் ஜெகா (எ) ஜெகதீஷ் (22). கடந்த 2 மாதங்களுக்கு முன் ஜெகதீஷ், கேளம்பாக்கத்தில் உள்ள கடைகளில் மிரட்டி பணம் வசூலித்தல், தனியாக செல்பவர்களிடம் வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டார். இதுதொடர்பாக, கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜெகதீஷ் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாமல்லபுரம் டிஎஸ்பி வைத்தீஸ்வரன், கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் எஸ்பி விஜயகுமார், கலெக்டர் ராகுல்நாத் ஆகியோருக்கு பரிந்துரை செய்தனர்.அதன்பேரில், ஜெகதீஷை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

Related Stories:

More
>