அரசு பள்ளியில் எம்எல்ஏ திடீர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை மகளிர் மேல்நிலைப்பள்ளியில், எம்எல்ஏ எழிலரசன் திடீர் ஆய்வு செய்தார். கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் 9 முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதையொட்டி, காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவிகளிடம் பள்ளியில் போதிய வசதிகள் உள்ளதா, கொரோனா ஊரடங்கு விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் அனுபவம், பள்ளியில் கழிப்பறைகள் சுத்தமாக  உள்ளதா என்பது உள்பட பல்வேறு குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின்போது, நகராட்சி ஆணையர்  லட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன், முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம், மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர்  அபுசாலி, துணை அமைப்பாளர் ராம்பிரசாத்  உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: