ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி? ரயில்வே போலீசார் விசாரணை

திருத்தணி: திருத்தணி கமலா தியேட்டர் அருகே ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியானார். திருத்தணி ரயில் நிலையம் அருகே கமலா தியேட்டர் உள்ளது. இந்த பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  எஸ்ஐ ஆனந்தன் மற்றும் போலீசார் சடலத்தை பார்த்தனர். அங்கு இறந்து கிடந்தவர் 35 வயதான ஆண் என்பது தெரிய வந்தது. அவருக்கு கை மற்றும் தலை ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் இருந்தது. எனவே, அவர் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்திருப்பாரா, கொலையா அல்லது தற்கொலையா  என்ற கோணத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories:

More
>