×

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத டிஏ உயர்வு

புதுடெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த டிஏ, கடந்த ஜூலை 14ம் தேதி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக  உயர்த்தப்பட்டது. இந்நிலையில், ஒன்றிய நிதியமைச்சகத்தின் செலவின துறை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் டிஏ, ஜனவரி 1, 2020ல் 4 சதவீதம், ஜூலை 1, 2020ல் 3 சதவீதம், ஜனவரி 1, 2021ல் 4 சதவீதம் உயர்த்தப்பட்டு, கடந்த ஜூலை 1ம் தேதியில் இருந்து 28 சதவீதமாக வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், ஜூலை 1- 2021 - டிசம்பர் 31, 2021க்கான காலத்துக்கு மேலும் 3 சதவீதம் டிஏ உயர்த்தப்படுகிறது. இது, கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அமல்ப்படுத்தப்படும். இதன்மூலம், மொத்த டிஏ 31 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த டிஏ உயர்வு, கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கும் சேர்த்து வழங்கப்படும். இதன்மூலம், ஒன்றிய அரசின் 47 லட்சம் ஊழியர்களுக்கு பலன் அளிக்கும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : U.S. government , 3 percent DA increase for U.S. government employees
× RELATED அமெரிக்க அரசு செலவினங்களுக்கான நிதி...