கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: கன்னட வார இதழான ‘லங்கேஷ்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் கவுரி லங்கேஷ். கடந்த 2017ம் ஆண்டு செப். 5ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பரசுராம் வாக்மோர், பிரவீன்குமார், நவீன்குமார் உள்ளிட்ட பலரை கர்நாடகா காவல்துறை கைது செய்து சி.ஐ.டி போலீசார் விசாரணை வருகின்றனர். இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், முக்கியமான குற்றவாளியான மோகன் நாயக் விடுதலை செய்தது மட்டுமில்லாமல், இந்த வழக்கில் திட்டமிட்டு கொலை செய்தமைக்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை எனக்கூறி, அந்த பிரிவுகளை ரத்து செய்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கெளரி லங்கேஷின் சகோதரியான காவிரி லங்கேஷ் கடந்த இரு மாதங்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ”இந்த விவகாரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்ரம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் திட்டமிட்டு கொலை என்ற வழக்கு பிரிவுகளை ரத்து செய்த கர்நாடகா உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. முன்னதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தொடர்ந்து விசாரிக்கலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories:

More
>