×

டென்ரிஃப் மகளிர் டென்னிஸ்: கலக்கிய கமிலா

டென்ரிஃப்: ஸ்பெயினின்  டென்ரிஃப் தீவில் மகளிர் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அங்கு நேற்று முன்தினம் நடந்த ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா(27வயது, 4வது ரேங்க்), கொலம்பியா வீராங்கனை கமிலா ஒசாரியோ(19வயது, 72வது ரேங்க்) ஆகியோர் மோதினர். முதல் செட்டை கைப்பற்ற இருவரும் கடுமையாக போராடினர். ஆனாலும் எலினா தனது அனுபவத்தை வெளிப்படுத்தி 7-5 என்ற புள்ளி கணக்கில் அந்த செட்டை கைப்பற்றி முன்னிலைப் பெற்றார். அடுத்த செட் ஆரம்பிப்பதற்குள் மழை தொடங்க ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது.

அந்த ஆட்டம் நேற்று தொடர்ந்து நடந்தது. அதில் 2வது செட்டை  6-3 என்ற கணக்கில் தனதாக்கிய கமிலா, 3வது செட்டையும் 6-2 என்ற கணக்கில் வசப்படுத்தினார். அதனால் ஒரு மணி 55 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் 2-1 என்ற செட்களில் வென்ற கமிலா 2வது சுற்றுக்கு முன்னேறினார். தன்னை விட பின்வரிசையில் உள்ள வீராங்கனையிடம் தோற்ற எலினா கண் கலங்கினார். அதே நேரத்தில் முன்னணி வீராங்கனையை வீழ்த்திய கமிலா தர வரிசையில் 72வது இடத்தில் இருந்து 63வது இடத்துக்கு முன்னேறினார். கூடவே ஸ்விடோலினா 4வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு பின்தங்கினார்.

Tags : Camila , Tenrif Women's Tennis: Camila confused
× RELATED நேஷனல் பேங்க் ஓபன் கமிலா ஜார்ஜி சாம்பியன்