×

தமிழகத்தில் இன்று 1,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 1,412 பேர் டிஸ்சார்ஜ்: 20 பேர் பலி: சுகாதாரத்துறை அறிக்கை.!

தமிழகத்தில் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்தவகையில் இன்று 1,164 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில்  இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் 1,29,820 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,164 ஆக உள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,170இல் இருந்து 1,164 ஆக குறைந்துள்ளது. சென்னையில் மேலும் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனாவில் இருந்து மேலும் 1,412 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 26,42,039 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 13,790 ஆக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் 15 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவால் மேலும் 20 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,968 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags : Tamil Nadu ,Health Department , 1,164 confirmed for corona infection in Tamil Nadu today, 1,412 discharged: 20 killed: Health Department report.!
× RELATED வளி மண்டல காற்று சுழற்சியால்...