ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள்.! நாளை மறுநாள் காலை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிப்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். பண்டிகைக் காலம் நெருங்குவதால் கூடுதல் தளர்வு அல்லது கட்டுப்பாடு விதிப்பது பற்றி ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் வரும் 23ம் தேதி ஆலோனை மேற்கொள்ள உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நாளை மறுநாள் காலை 11.30 மணிக்கு மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பண்டிகை காலங்களில் கூடுதல் தளர்வு அல்லது எடுக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories:

More
>