இது என்ன புது ட்ரெண்டா இருக்கு!: மணப்பாறையில் 50 பைசாவுக்கு டி - சர்ட்...அலைமோதும் மக்கள் கூட்டத்தால் லாக்டவுனுக்கே லாக் போட்ட போலீஸ்..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 50 பைசாவுக்கு டி - சர்ட் விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்திய கடையின் முன்பு ஏராளமானோர் கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மணப்பாறை பேருந்து நிலையம் அருகே உள்ள சின்னக்கடை வீதியில் ஆண்களுக்கான பிரத்யேக துணிக்கடை ஒன்று புதிதாக திறக்கப்பட்டது. திறப்பு விழாவை ஒட்டி 50 பைசாவுக்கு டி - சர்ட் விற்கப்படும் என்றும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே இந்த சலுகை இருக்கும் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. இதனால் கடை திறப்பதற்கு முன்பே இளைஞர்கள் மட்டுமில்லாமல் அதிகளவில் பெண்களும் திரண்டிருந்தனர். இதையடுத்து 50 பைசா வாங்கிக்கொண்டு டோக்கன் வழங்கப்பட்டது.

இதனை வாங்க கூட்டம் முண்டியடித்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. துணிக்கடையின் முன்பு கூடிய கூட்டத்தால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மணப்பாறை போலீசார், உரிய அனுமதியின்றி கூட்டத்தை கூட்டியதாக கடையை மூடினர். லாக் டவுன் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கடையை விளம்பரப்படுத்த எண்ணி அதிரடி சலுகையை அறிவித்த நிலையில் திறப்பு விழா அன்றே போலீசார் பெயரைப் போலவே கடையும் முழு லாக்டவுன் செய்துவிட்டனரே என கடை உரிமையாளர் புலம்பி தள்ளினார்.

Related Stories:

More
>