பயிற்சி போட்டியில் பாக்., வெ.இண்டீஸ் தோல்வி'

அபுதாபி: உலக கோப்பை டி.20 தொடருக்கான பயிற்சி போட்டி ஒன்றில் நேற்று தென்ஆப்ரிக்கா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன் குவித்தது. அதிகபட்சமாக பகார் ஜமான் 52 ரன் (28 பந்து) எடுத்தார். பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்கா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் வான் டெர் டுசன் ஆட்டம் இழக்காமல் 51 பந்தில் 101 ரன் விளாசினார்.

பாகிஸ்தான் முதல் போட்டியில் வரும் 24ம் தேதி இந்தியாவுடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது. துபாயில் நேற்று நடந்த மற்றொரு பயிற்சி போட்டியில் ஆப்கானிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களே எடுத்தது. இதனால் 56 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது.

Related Stories:

More
>